நாமக்கல் மாவட்டத்தில் கள்ளத்தனமாக நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்போர், தங்கள் வசம் உள்ள கள்ளத்துப்பாக்கிகளை ரகசிய இடத்தில் வைத்துவிட்டு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட தனிப்பிரிவிற்கோ தகவல் தெரிவிக்குமாறு கடந்த 2ஆம் தேதியன்று நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு உத்தரவிட்டிருந்தார்.
இதனிடையே கொல்லிமலை அருகேயுள்ள மயானத்தில் துப்பாக்கிகள் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் சேந்தமங்கலம் வட்ட காவல் ஆய்வாளர் தீபா தலைமையிலான தனிப்படையினர் கொல்லிமலை அரியூர்நாடு அடுத்துள்ள அரியூர், சோளக்காடு ஆகிய பகுதிகளில் காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த மயானங்களின் அருகேயுள்ள முட்புதரில் 35 எண்ணிக்கைகளிலான SBML ரக நாட்டுத் துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.