நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் காவல்துறை, ஊர்க்காவல் படையினர் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு தொடங்கி வைத்தார். இதில் மாவட்டம் முழுவதும் உள்ள காவலர்கள், ஊர்க்காவல் படையினர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
இரத்ததான முகாம் : காவல்துறையினர் பங்கேற்பு !
நாமக்கல்: அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற இரத்ததான முகாமில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஆர்வமுடன் இரத்தானம் வழங்கினர்.
நாமக்கல் இரத்ததானம்
இதுகுறித்து அருளரசு பேசுகையில், வருடத்திற்கு மூன்று முறை ரத்ததானம் செய்யலாம். ஒருவரிடம் இருந்து பெறப்படும் இரத்தமானது மூன்று உயிர்களை காக்க பயன்படுகிறது. காவலர்கள் ரத்ததானம் செய்ய முன் உதாரணமாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.