தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா நிவாரண நிதிக்கு தன்னுடைய ஒருமாத ஊதியத்தை வழங்கிய ஆய்வாளர்! - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு உதவிய ஆய்வாளர்

நாமக்கல்: தமிழ்நாடு முதலமைச்சர் கோவிட்-19 நிவாரண நிதிக்கு தனது ஒரு‌ மாத ஊதியத்தை ராசிபுரம் காவல் ஆய்வாளர் பாரதிமோகன் வழங்கியுள்ளார்.

police
police

By

Published : Apr 19, 2020, 1:51 PM IST

நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கரோனா தொற்றால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன.

கரோனா தடுப்புப் பணிகளுக்காகத் தொழிலதிபர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் நிவாரண நிதி வழங்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கைவிடுத்திருந்தார். அதன்படி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பலரும் தங்களால் இயன்ற தொகையை வழங்கிவருகின்றனர்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாரதிமோகன், தமிழ்நாடு முதலமைச்சரின் கோவிட்-19 நிவாரண நிதிக்கு உதவும்வகையில் தனது ஒருமாத ஊதியத்தை பிடித்தம் செய்யவேண்டி ஒப்புதல் கடிதத்தை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசிடம் வழங்கினார்.

காவல் ஆய்வாளர் பாரதிமோகனின் சேவை மனப்பான்மையை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு பாராட்டினார்.

இதையும் படிங்க:கரோனா தடுப்புக்காக காவல் துறையுடன் இணைந்த நடிகர் சசிகுமார்

ABOUT THE AUTHOR

...view details