நாமக்கல் மாவட்டம் வகுரம்பட்டியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் எம்.ஆர். டிராவல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் இன்று (நவ.3) தனியார் வங்கியில் பணம் கட்டுவதற்காக தனது காரில் ஒரு வழிப்பாதையில் சென்றுள்ளார். இதனைக் கண்ட போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சத்தியமூர்த்தி, மோகன்ராஜை மறித்து அவரிடம் ரூ. 200 பணம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மோகன்ராஜ் நாமக்கல் பேருந்து நிலையம் அருகே நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு அமர்ந்து காவல் துறையினருக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
ரூ. 200 லஞ்சம் கேட்ட காவலர் - காரை நடுரோட்டில் நிறுத்தி ஓட்டுநர் தர்ணா! - namakkal district news
நாமக்கல்: காவல் உதவி ஆய்வாளர் ரூ. 200 பணம் கேட்டதால், காரை நடுரோட்டில் நிறுத்தி விட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காரை நடுரோட்டில் நிறுத்தி விட்டு ஓட்டுநர் தர்ணா
இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் ஆய்வாளர் செல்வராஜ் போராட்டத்தில் ஈடுபட்டவரை சமாதானம் செய்ய முயற்சித்தார். ஆனால் அவர் அதனை கேட்கவில்லை. உடனே கோபமடைந்த காவல் ஆய்வாளர், மோகன்ராஜின் சட்டையை பிடித்து தரதரவென காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: காவல் நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்!