நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை குண்டனிநாடு ஊராட்சி கீரக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி நடேசன். இவரது, மனைவி தீபா(25). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
தீபா நேற்று முன்தினம் (ஜூலை12) எடக்காடு வனப்பகுதிக்கு மாடு மேய்க்கச் சென்றுள்ளார். இரவு வெகுநேரம் ஆகியும் தீபா வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த கணவர் நடேசன், ஊர் பொதுமக்கள் அவரைத் தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை தீபா எடுக்காடு வனப்பகுதியில் நிர்வாணமான முறையில், பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, தலையில் கல்லால் தாக்கப்பட்டு, முகத்தை சேலையால் கட்டி உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.