தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாமக்கல்லில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவல் - கிராம மக்கள் அச்சம்

ராசிபுரம் அருகே ஆப்பிரிக்கா பன்றிக்காய்ச்சலால் பன்றிகள் உயிரிழந்த நிலையில் பண்ணைகளை சுற்றி உள்ள கிராம மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 25, 2023, 4:06 PM IST

நாமக்கல்லில் ஆப்பிரிக்கா பன்றிக்காய்ச்சலால் பரவல்

நாமக்கல் மாவட்டம்ராசிபுரம் அருகே பண்ணையில் வளர்க்கப்பட்ட பன்றிகளுக்கு ஆப்பிரிக்கா பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பண்ணையை சுற்றிய உள்ள 1 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கல்லாங்குளம் என்ற இடத்தில் ராஜாமணி என்பவர் கடந்த சில வருடங்களாக வெண் பன்றி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது பண்ணையில் வளர்க்கப்பட்ட இரண்டு பன்றிகள்‌‌ கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென உயிரிழந்துள்ளன. இதனைத் தொடர்ந்து நாமக்கல்லில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அங்கு சென்ற மருத்துவக் குழுவினர் அவற்றின் மாதிரிகளை சேகரித்து போபாலில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த ஆய்வின் முடிவில் ஆப்பிரிக்கா வைரஸ் தாக்கி பன்றிகள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த பண்ணையை கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

அதன்பின் அங்கு குட்டிகள் உட்பட 20 பன்றிகள் இருப்பதை உறுதி செய்துள்ளதாகவும் அவற்றை 15 அடி ஆழம் குழி தோண்டி புதைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோ மீட்டர் சுற்றலுவுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதனிடையே பண்ணை உரிமையாளர், அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு அந்த நேரத்தில் 20 பன்றிகளை மட்டுமே வைத்துவிட்டு மீதமுள்ள 500-க்கும் மேற்பட்ட பன்றிகளை உறவினரின் விவசாய தோட்டத்தில் மறைத்துவைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த விவசாய தோட்டத்தின் அருகில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளதால் கிராம மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

இது குறித்து கால்நடை மருத்துவரிடம் கேட்டபோது, அதிகாரிகளுடன் சென்று பன்றி பண்ணையில் ஆய்வு செய்ததாகவும் அங்கு 20 பன்றிகள் மட்டுமே இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:வேரோடு சாய்ந்த மரம் மீண்டும் நிமிர்ந்து நின்ற அதிசயம்? பூஜை செய்து வழிபடும் கிராம மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details