தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி சிபிஎம் நூதன போராட்டம்! - Marxist Communist party protest

நாமக்கல்: பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி திருச்செங்கோடு அருகே கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி நூதன போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டனர்.

போராட்டம்
போராட்டம்

By

Published : Feb 19, 2021, 12:25 PM IST

பெட்ரோல், டீசல், கேஸ் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை பன்மடங்காக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒருபகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள எலச்சிபாளையத்தில் நேற்று (பிப். 18) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து பாடைகட்டி எடுத்து வந்து எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தின் அருகே வைத்தும் விறகு அடுப்பு வைத்து சமையல் செய்வது போன்றும் பெட்ரோல், டீசல் நிரம்பிய கேனுக்கு மாலை அணிவித்தும் போராட்டம் நடத்தினர்.

கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி நுாதன போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

அப்போது பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பியும் சோக பாடல்களை ஒலிக்கவிட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details