தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி விடுதலைப் பத்திரம் தயார் செய்தோர்மீது நடவடிக்கை எடுக்ககோரி ஆட்சியரிடம் மனு!

நாமக்கல் : போலியாக விடுதலைப் பத்திரம் தயார் செய்து தனது நிலத்தை கிரயம் செய்தோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, விவசாயி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தோர்
ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தோர்

By

Published : Aug 31, 2020, 11:07 PM IST

கொல்லிமலை, அரியூர் நாடு ஊராட்சி, மேல்கலிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் தனராஜ். இன்று (ஆக. 31) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த இவர், புகார் மனு ஒன்றினை அளித்தார்.

அதில், “என் உடன் பிறந்தவர்களின் பெயரில் போலியாக விடுதலைப் பத்திரம் ஒன்றைத் தயார் செய்து,எங்கள் ஊரைச் சேர்ந்த கோபால் என்பவர், கடந்த 2017ஆம் ஆண்டு எனது நிலத்தை கிரயம் செய்துள்ளார்.

எனவே, கோபால் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கிரயத்தையும் ரத்து செய்ய வேண்டும். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த கிராம நிர்வாக அலுவலர் உட்பட ஐந்து பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக உறிஞ்சப்படும் நீர்; நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் புகார்

ABOUT THE AUTHOR

...view details