நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட நகரின் மையப்பகுதியில் கமலாலய குளம் உள்ளது. உள்ளூர் மக்களின் பொழுது போக்கிற்காக குளத்தின் அருகே பூங்கா அமைக்கப்பட்டு, குளத்தில் படகு சவாரிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை பராமரிக்கும் பொறுப்பு தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அங்கு துடுப்பு மற்றும் பெடல் படகுகள் இயக்கப்படுகின்றன.
படகு சவாரி செய்பவர்களுக்கு லைஃப் ஜாக்கெட் அளிக்கப்படும் - நாமக்கல் நகராட்சி ஆணையர் - namakkal municipality commissioner
நாமக்கல் கமலாய குளத்தில் இரவு நேரத்தில் படகு சவாரி செய்பவர்களுக்கு பாதுகாப்பு உடை (லைப் ஜாக்கெட்) வழங்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாமக்கல் நகராட்சி ஆணையர் சுதா உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் குளத்தில் மாலை 7 மணிக்கு மேல் இருள் சூழ்ந்த நிலையில் எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் படகு சவாரி மேற்கொள்கின்றனர். மேலும் பலர் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்து கொண்டும் படகு சவாரி மேற்கொள்கின்றனர். எனவே ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பாக நகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து நாமக்கல் நகராட்சி ஆணையர் சுதாவிடம் கேட்டபோது, படகு சவாரி மேற்கொள்பவர்கள் கட்டாயம் லைப் ஜாக்கெட் அணிய உத்தரவிடுவதோடு, இரவு நேர படகு சவாரியை தடை செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.