தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குட்டை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஆட்சியரிடம் மனு! - மாவட்ட ஆட்சியர் மேகராஜ்

நாமக்கல்: நீர்தேக்க குட்டை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Land Aggressive Petition  People Land Aggressive Petition To Collector In Namakkal  Namakkal District News  Tamilnadu currernt News  நாமக்கல் நில ஆக்கிரமிப்பு மனு  நாமக்கல் மாவட்ட செய்திகள்  நில ஆக்கிரமிப்பு  மாவட்ட ஆட்சியர் மேகராஜ்  Collector Megharaj
People Land Aggressive Petition To Collector In Namakkal

By

Published : Dec 17, 2020, 2:18 PM IST

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்த பொன்னேரி கோம்பை பகுதியில் அரசுக்குச் சொந்தமான 18 ஏக்கர் பரப்பளவிலான நீர்த்தேக்க குட்டை உள்ளது. இந்தக் குட்டைப் பகுதியை அப்பகுதியில் உள்ள சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

இதையடுத்து, குட்டைப் பகுதி வழியாகப் பொதுமக்கள் பயன்படுத்திவந்த பொது வழித்தடத்தையும் அவர்கள் அடைத்துவிட்டனர். இதனால், அப்பகுதியில் வசிக்கும் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவதிப்பட்டுவருவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஆக்கிரமைப்பை அகற்றக்கோரி மனு

இது குறித்து, வருவாய்த் துறை அலுவலர்களிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் மேகராஜை சந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.

இதையும் படிங்க:கால்வாய்கள் ஆக்கிரமிப்பு: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார்

ABOUT THE AUTHOR

...view details