வேட்பாளர் பற்றிய விவரம் பின்வருமாறு, நாமக்கல் மாவட்டம், அத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சின்ராஜ். விவசாயியான இவர் கோழி பண்ணை, நகைக்கடை வியாபாரம் செய்து வருகிறார். பெற்றோர் பழனியப்பன்-செட்டி அம்மாள். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், சுகன், சுஜிதா என்ற இருப்பிள்ளைகளும் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியில் உள்ளார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளராக சின்ராஜ் தேர்வு
நாமக்கல்: நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் ஏ.கே.பி. சின்ராஜ் என்பவர் போட்டியிடுகிறார்.
இவர் கொங்கு முன்னேற்ற கழகத்தில் இருந்தபொழுது 1996 சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரத்தில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் தமயந்தியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில நிதிக் குழு தலைவராக உள்ளார். இந்த நிலையில் திமுகவின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்கு மக்கள் தேசிய கட்சி சார்பில் நாமக்கல் தொகுதியில் வேட்பாளராக சின்ராஜை அறிவித்துள்ளது. இதை ஈரோட்டில் நடந்த ஆட்சி மன்ற குழுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அறிவித்தார்.