தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிதி நிறுவனம் 1 கோடி மோசடி: 100 பேர் நாமக்கல் ஆட்சியரிடம் புகார்! - நாமக்கல் நிதி நிறுவனம் மோசடி

நாமக்கல்: தனியார் நிதி நிறுவனத்திடமிருந்து தங்கள் பணத்தை பெற்றுத்தருமாறு நாமக்கல்லைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

DAL company money fraud

By

Published : Oct 21, 2019, 4:32 PM IST

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு டால் என்ற தனியார் நிதி நிறுவனம் இயங்கிவருகிறது. இந்த நிறுவனத்தில் 49 பேர் பங்குதாரர்களாக உள்ளனர். மாதந்தோறும் பணம் செலுத்தினால் ஐந்தாண்டு கழித்து வட்டியுடன் அந்தப் பணத்தை திருப்பித் தருவோம் என்றும் பணம் செலுத்தும் அனைவருக்கும் 800 சதுரஅடி பரப்பளவில் நிலம் வாங்கித் தருவோம் எனவும் கவர்ச்சிகரமான அறிவிப்பினை அந்நிறுவனம் அளித்திருந்தது.

இதனை நம்பி நாமக்கல் மாவட்டத்திலுள்ள சுமார் 500-க்கும் மேற்பட்டோர் 2010ஆம் ஆண்டு முதல் இந்நிறுவனத்தில் மாதந்தோறும் 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை செலுத்திவந்துள்ளனர். இருப்பினும் டால் நிதி நிறுவனம் கூறியபடி 2015ஆம் ஆண்டு முதல் பணத்தை திருப்பித் தரவில்லை.

நிதி நிறுவனத்திடமிருந்து பணத்தை மீட்டுத்தர ஆட்சியரிடம் புகார் மனு அளித்த மக்கள்

இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் 100-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு டால் நிறுவனம் 2015ஆம் ஆண்டு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையான ஒரு கோடி ரூபாயை உடனடியாக பெற்றுத்தருமாறு மனு அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன்... காங்கிரஸ் வேட்பாளரைக் கண்டித்து சாலை மறியல்!

ABOUT THE AUTHOR

...view details