பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் அதிகளவில் கூடுவதைத் தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் சில உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
அதன்படி, பதால் கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, ஜேடர்பாளையம் படுகையணை, நகராட்சிகளில் உள்ள பூங்காக்கள் ஆகியவை ஜனவரி 15,16 மற்றும் 17ம் தேதிகளில் மூட உத்தரவிடப்பட்டது.
செலம்ப கவுண்டர் பூங்காவில் குவிந்த மக்கள் இந்நிலையில் நாமக்கல் நகராட்சி மையப் பகுதியில் உள்ள செலம்ப கவுண்டர் பூங்கா இன்று (ஜன.17) வழக்கம் போல் திறக்கப்பட்டது. தொடர் விடுமுறையொட்டி அதிகளவில் பொதுமக்கள் பூங்காவில் குவிந்தனர். தகுந்த இடைவெளி போன்ற எவ்வித கரோனா விதிமுறைகளையும் பூங்காவில் பொதுமக்கள் கடைப்பிடிக்கவில்லை.
செலம்ப கவுண்டர் பூங்காவில் குவிந்த மக்கள்! மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி பூங்கா திறக்கப்பட்டது குறித்து நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலத்திடம் கேட்டபோது, "பொங்கல் விடுமுறை தினத்தில் பூங்காவை மூட வேண்டும் என ஆட்சியரிடமிருந்து தங்களுக்கு எவ்வித உத்தரவும் கிடைக்க பெறவில்லை" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:தேனியில் வினோதம்: ஜல்லிக்கட்டை போல பன்றி தழுவுதல் போட்டி