தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இறைச்சிக் கழிவு ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்! - நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல்: அலங்காந்தம் அருகே இறைச்சிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரியை சிறை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்த பொதுமக்களால் அப்பகுதியில் சிறிது பதற்றம் நிலவியது.

People capture truck carrying meat waste
People capture truck carrying meat waste

By

Published : Jan 28, 2021, 2:19 PM IST

நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம் அடுத்த கெட்டிமேடு பகுதியில் கோகுல்ராஜ் என்பவரது விவசாய நிலத்தின் ஒரு பகுதியில் கேரளா, கோவை, ஈரோடு, ராமநாதபுரம், திருச்சி, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து இறைச்சிக் கழிவுகள், மீன் கழிவுகள், மாமிசக் கழிவுகள் எடுத்து வந்து உலர்த்தி அதனை பவுடராக்கி விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்த இறைச்சி கழிவுகளால் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும், இறைச்சிக் கழிவுகளை அலசும் கழிவுநீர் அப்பகுதியிலேயே தேக்கி வைப்பதால் சுற்று வட்டாரங்களில் நிலத்தடி நீர் மாசுபடுவதாகவும் கூறிய அப்பகுதி பொதுமக்கள், இறைச்சிக் கழிவுகளை உலர்த்த தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இன்று (ஜன.28) இறைச்சிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்த ஊர் பொதுமக்கள், சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் இறைச்சிக் கழிவுகளை இனிமேல் இப்பகுதிக்கு கொண்டு வரக்கூடாது என்றும், இதன் மீது அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனத்தை எருமப்பட்டி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க:சீர்காழி நகைக் கொள்ளை: 17கிலோ தங்கம் பறிமுதல்... மூவர் கைது, ஒருவர் சுட்டுக் கொலை!

ABOUT THE AUTHOR

...view details