தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயிலில் ஏற்பட்ட இன்ஜின் கோளாறு - வேலைக்குச் செல்ல முடியாமல் பயணிகள் அவதி! - ராசிபுரம் ரயில் நிலையத்தில் இன்ஜின் கோளாறு

நாமக்கல் : ராசிபுரம் ரயில் நிலையத்தில் இன்ஜின் கோளாறு காரணமாக அரை மணிநேரத்திற்கும் மேலாக ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பணிக்குச் செல்ல முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

passenger train engine disorder

By

Published : Nov 18, 2019, 10:59 AM IST

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ரயில் நிலையத்தில் நாள்தோறும் சேலத்திலிருந்து கரூர் நோக்கி பயணிகள் ரயில் காலை 7.10 மணியளவில் செல்கிறது. இதில் ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பணிக்குச் செல்ல சேலம் - கரூர் பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர்.

ரயிலில் ஏற்பட்ட இன்ஜின் கோளாறு

இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் வந்த ரயில் திடீரென இன்ஜின் கோளாறு காரணமாக, 45 நிமிடத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டது.

இதனால் பணிக்குச் செல்பவர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாயினர். நீண்ட நேரத்திற்குப் பிறகு இன்ஜின் கோளாறு சரிசெய்யப்பட்டு பயணிகள் ரயில் புறப்பட்டது.

இதையும் படிங்க:மாநில கபடி போட்டி: சாம்பியன் பட்டம் வென்ற நாமக்கல்

ABOUT THE AUTHOR

...view details