தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாமக்கல்லில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு - namakkal district news

பொதுமக்களிடையே அச்சத்தைப் போக்கவும், சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்தவும் காவல் துறையினர் தயார் நிலையில் உள்ளனர் என்பதை அறிந்துகொள்ளும் வகையில் துணை ராணுவத்தினர், மாவட்ட காவல் துறையினர் இன்று (மார்ச் 3) நாமக்கல்லில் கொடி அணிவகுப்பை நடத்தினர்.

Paramilitary Pride rally held in namakkal
நாமக்கல்லில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

By

Published : Mar 3, 2021, 8:23 PM IST

நாமக்கல்: தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக இந்திய திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த துணை ராணுவப் படையினர் 100 பேர் நாமக்கல் வந்துள்ளனர்.

இந்நிலையில், பொதுமக்களிடையே அச்சத்தைப் போக்கவும், சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்தவும் காவல் துறையினர் தயார் நிலையில் உள்ளனர் என்பதை அறிந்துகொள்ளும் வகையில் துணை ராணுவத்தினர், மாவட்ட காவல் துறையினர் என 130 பேர் இன்று கொடி அணி வகுப்பை நடத்தினர்.

நாமக்கல்லில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

நாமக்கல் காவல் நிலையம் அருகில் தொடங்கிய அணிவகுப்பு திருச்சி சாலை, மருத்துவர் சங்கரன் ரோடு, மோகனூர் சாலை, பரமத்தி சாலை, பூங்கா சாலை என 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது.

இதனை காவல் கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் ரவி கொடியசைத்து தொடங்கிவைத்தார். மாவட்டத்தில் பதற்றமான பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடைபெறும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டியில் மாப்பிள்ளை அழைப்பு!

ABOUT THE AUTHOR

...view details