தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூய்மை பணியாளருக்கு கரோனா: பேரூராட்சி அலுவலகம் மூடல் - பரமத்திவேலூர் பேரூராட்சி

நாமக்கல்: தூய்மை பணியாளருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பரமத்திவேலூர் பேரூராட்சி அலுவலகம் மூடப்பட்டது.

பேரூராட்சி அலுவலகம் மூடல்
பேரூராட்சி அலுவலகம் மூடல்

By

Published : Jul 23, 2020, 5:31 PM IST

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேரூராட்சி அலுவலத்தில் பணிபுரியும் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த தூய்மைப் பணியாளருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கிருமி நாசினி மருந்து தெளித்து பேரூராட்சி அலுவலகம் மூடப்பட்டது.

கரோனா தொற்று பாதிக்கப்பட்ட அவரை நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவருடன் பணிபுரியும் ஊழியர்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு அதன் முடிவுகள் நாளை (ஜூலை 24) வெளிவரும் என சுகாதார துறையில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details