தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிணற்றில் விழுந்துசிறுவன் மரணம்: பொதுமக்கள் மறியல் - ParamathiVelur boy dies after falling into well

நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த நிலையில், பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு
சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

By

Published : Jan 28, 2021, 5:47 PM IST

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை அடுத்துள்ள வெட்டுக்காடுப்புதூரைச் சேர்ந்தவர்கள் மாரிமுத்து-மேனகா தம்பதி. இந்தத் தம்பதி கூலித் தொழில் செய்துவருகின்றனர். இவர்களின் இளைய மகன் குமரன் (9) இன்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, வீட்டிற்கு அருகிலுள்ள சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் குமரன் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளார். பின்னர் தண்ணீரில் மூழ்கிய குமரன் உயிரிழந்தார். இதைக் கண்ட அப்பகுதியினர் உடனடியாக காவல், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில், பொது இடத்தில் உள்ள இந்தக் கிணற்றிற்குச் சுற்றுச்சுவர் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், எனவே இந்தக் கிணற்றைச் சுற்றி சுற்றுச் சுவர் அமைத்து உடனடியாக பாதுகாப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், பரமத்தி வேலூர் - நாமக்கல் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியபின் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இதனால், அப்குதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க:கிணற்றில் தவறி விழுந்த 17 வயது சிறுமி மீட்பு: மருத்துவமனையில் அனுமதி

ABOUT THE AUTHOR

...view details