தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முட்டை லாரி ஓட்டுநரிடம் ரூ.16.39 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை - Namakkal Eggs taken in a lorry without proper documents cost Rs. 16.39 lakh was seized.

நாமக்கல்: நாமக்கல்-கரூர் எல்லைகளை இணைக்கும் காவிரி ஆற்றுப்பாலம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது, அவ்வழியே வந்த முட்டை லாரியில் உரிய ஆவணமின்றி எடுத்துவந்த ரூ.16.39 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய ரூ. 16.39 லட்சம்
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய ரூ. 16.39 லட்சம்

By

Published : Mar 10, 2021, 12:37 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்க நாமக்கல் மாவட்டத்தில் 36 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் இரவு- பகலாக தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல்-கரூர் எல்லையில் வாகன தணிக்கை

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நாமக்கல்-கரூர் எல்லைகளை இணைக்கும் காவிரி ஆற்றுப்பாலம் வாகன சோதனை சாவடியில், தேர்தல் பறக்கும் படை அலுவலர் விஜயக்குமார் தலைமையில் குழுவினர் இன்று (மார்ச்10) காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய ரூ. 16.39 லட்சம்
அப்போது அவ்வழியாக கேரளாவில் முட்டை லோடு இறக்கி விட்டு, நாமக்கல்லுக்கு வந்த முட்டை லாரியை மடக்கிப் பிடித்து ஓட்டுநர் ஆனந்திடம் விசாரணை நடத்தியதில் உரிய ஆவணமின்றி எடுத்துவந்த ரூ.8.98 லட்சம் ரொக்கப்பணம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ரூ.8,98,000 லட்சம் ரொக்கப்பணத்தை அலுவலர்கள் பறிமுதல்செய்தனர்.

ரூ. 16.39 லட்சம் பறிமுதல்
இதேபோல் மற்றொரு முட்டை லாரியையும் சோதனை செய்ததில் ஓட்டுநர் பழனியாண்டியிடம் உரிய ஆவணவமின்றி ரூ.7,41,000 லட்சம் இருந்த பணத்தை பறிமுதல்செய்தனர்.

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய ரூ. 16.39 லட்சம்
இதனையடுத்து இரண்டு முட்டை லாரி ஓட்டுநரிடம் பறிமுதல்செய்த ரூ.16.39 லட்சம் பணத்தையும் பரமத்தி வேலூரிலுள்ள சார்பு கரூவூலத்தில் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க:திருவையாறு அருகே வாகன சோதனையில் 1 லட்சம் ரூபாய் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details