நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள இந்தியன் வங்கி கிளைகளில் நிலுவையில் உள்ள வாராக்கடன்கள் சம்பந்தமாக தீர்வு காண்பதற்கு வங்கிக்கிளைகளில் கடன் பெற்ற 400க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பரமத்தி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் அறிவிப்புகள் அனுப்பப்பட்டன.
பரமத்திவேலூரில் இந்தியன் வங்கிகளின் வாராக் கடன்கள் தீர்வு - பரமத்தி வேலூர் மக்கள் நீதிமன்றம்
நாமக்கல்: இந்தியன் வங்கி கிளைகளில் நிலுவையில் உள்ள வாராக்கடன்கள் சம்பந்தமாக மக்கள் நீதிமன்றம் மூலமாக தீர்வு காணப்பட்டது.
Paramathivelur lok adalac investigate bank loans of indian banks in namakal
இதுகுறித்து பரமத்தி சார்பு நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் சார்பு நீதிமன்ற நீதிபதி அசின்பானு தலைமையில் தீர்வு காணப்பட்டது. இதில் பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள ஏழு இந்தியன் வங்கி கிளைகளில் இருந்து 33 வழக்குகளில் ரூ.65 லட்சத்திற்கு வாராக்கடன்கள் தீர்வு காணப்பட்டன.
இதில் ஓய்வு பெற்ற நீதிபதி ஜெகநாதன், சமூக ஆர்வலர் சுவாமியப்பன், வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், இந்தியன் வங்கி மேலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.