நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சக்தி நகரில் உள்ள கடை மற்றும் வீடுகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்றவற்றை பதுக்கி வைத்து பல்வேறு கடைகளுக்கு மறைமுகமாக விற்பனை செய்து வருவதாக பரமத்திவேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜாரண வீரனுக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ரகசிய தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் காவல்துறையினர், சம்பந்தப்பட்ட கடை, வீடுகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குடோனில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான 300 கிலோ பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.