தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆயுதபூஜை: பரமத்தி வேலூரில் வாழைத்தார் ஏலம் வீழ்ச்சி! - வாழைத்தார்களின் விலை குறைவு,

நாமக்கல்: ஆயுதபூஜையை முன்னிட்டு பரமத்தி வேலூரில் நடைபெற்ற வாழைத்தார் சந்தையில், வாழைத்தாரின் விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

paramathi vellore banana market

By

Published : Oct 5, 2019, 5:44 PM IST

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் ஆயுதபூஜையை முன்னிட்டு வாழைத்தார் சந்தை தொடங்கியது. பரமத்தி வேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.

இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

இதேபோன்று, சிறு விவசாயிகள் பரமத்தி வேலூர் வாழைத்தார் சந்தைக்கு தங்களது வாழைத்தார்களை நேரடியாகக் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற ஏலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் பல்வேறு வகையான வாழைத்தார்கள் விற்பனையானது.

  • பூவன் வாழைத்தார் 450 ரூபாய்,
  • ரஸ்தாலி வாழைத்தார் 400 ரூபாய்,
  • பச்சைநாடன் வாழைத்தார் 350 ரூபாய்,
  • கற்பூரவள்ளி வாழைத்தார் 350 ரூபாய்,
  • மொந்தன் வாழைக்காய் ஒன்று 6 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன.

இதுகுறித்து, வாழை விவசாயி பாஸ்கர் கூறுகையில் 'சென்ற ஆண்டை ஒப்பிடுகையில் இன்று நடைபெற்ற ஏலத்தில் எதிர்பார்க்காத வகையில் அதிக விலை குறைந்துள்ளன. ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை போன்ற பண்டிகை காலங்களிலும் வாழைத்தார்களின் விலை அதிகரிக்காமல் வீழ்ச்சி அடைந்துள்ளது வேதனையளிக்கிறது' என்றார்.

ABOUT THE AUTHOR

...view details