நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள எஸ்.வாழவந்திக்கு உள்பட்ட மேலப்பட்டியில் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் பட்டியிலனத்தைச் சேர்ந்த குப்புசாமி. அதே பகுதியைச் சேர்ந்த ஐந்தாவது வார்டு உறுப்பினர் சுரேஷ். இவர் குப்புசாமியிடம் கல்விக் கடன் வாங்க சிபாரிசு செய்யுமாறு தொடர்ந்து கேட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் ஊராட்சி மன்றத் தலைவர் குப்புசாமி இதற்கு ஒத்துழைப்பு தராமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஆத்திரமடைந்த சுரேஷ், நேற்று (நவ.01) தனது இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த குப்புசாமியை வழிமறித்து அவரது சாதிப் பெயரைக் குறிப்பிட்டு தகாத வார்த்தைகளால் அவரைத் திட்டியும், கட்டையால் குப்புசாமியின் தலையில் பலமாகத் தாக்கிவிட்டும் அங்கிருந்து தப்பியோடி உள்ளார்.