நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசினர் மாளிகைகள் மற்றும் தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் 299 குடும்பத்தார் சிறப்பு முகாம்களில் உள்ளனர். இவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டுவருகின்றன.
நாமக்கல்: பாதுகாப்பு முகாம்களுக்கு குப்பை வண்டியில் செல்லும் உணவுகள் - குப்பை சேகரிக்கும் வாகனத்தில் உணவுகள்
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் கனமழை காரணமாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டோருக்கு குப்பை வண்டியில் செல்லும் உணவுகள் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டோருக்கு அப்பகுதி நகர மன்ற தலைவர் செல்வராஜ் தனது சொந்த செலவில் உணவு வழங்க ஏற்பாடு செய்தார். இந்த உணவுகள் இன்று (ஆக.7) குப்பை வாகனத்தில் கொண்டு வரப்பட்டன. இதனால் முகாம்களில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பாதிக்கும் மேற்பட்டோர் சாப்பிடாமல் உள்ளனர்.
இதையும் படிங்க: போட்டோ எடுக்குறதுக்காக மட்டும் வந்தாங்க..! மருத்துவத்தை தேடி அலையும் மக்கள்..? எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...