நாமக்கல் மாவட்டத்தையடுத்த செல்லப்பம்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான வாள் வீச்சு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் 14 வயதிற்குட்பட்டோர், 19 வயதிற்குட்பட்டோர் என 3 பிரிவுகளில் மாணவர்கள், மாணவிகள் என தனித்தனியாக போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெற்றன.
வாள் வீச்சு போட்டி: 300 மாணவர்கள் பங்கேற்பு! - நாமக்கல் மாவட்டச் செய்திகள்
நாமக்கல்: பள்ளி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டியில் 300க்கும் மேற்பட்டோர் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
fencing-c
இதில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வாள் விளையாட்டு வீரர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இப்போட்டிகளில் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகள் 24 பேர் தேர்வு செய்யப்பட்டு, அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாநில அளவிலான வாள் வீச்சு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.