பெண்கள் உடல் ரீதியாக சந்திக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று மாதவிடாய் சுழற்சி. இயற்கையாக நடைபெறும் உடல் ரீதியான மாற்றம் என்றபோதிலும், இவற்றுக்கு சமூக ரீதியாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கால மாற்றத்தால் கட்டுப்பாடுகள் தளர்ந்தாலும், இப்பிரச்னை வேறு விதமாக உருவெடுத்துள்ளது. மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்கள் தான் இப்பிரச்சினையின் ஆணிவேர்.
சுகாதார மற்ற நாப்கின், மண்ணில் மக்காத வேதிப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் நாப்கின்களால் பல்வேறு உடல் சார்ந்த நோய்களுக்கும் பெண்கள் ஆளாக வாய்ப்புள்ளது. இந்த பாதிப்பே, வேதிப்பொருள் கலப்படமில்லாமல், முற்றிலும் இயற்கையான முறையில் கிடைக்கும் பஞ்சுகளை கொண்டு நாப்கின் தயார் செய்யும் தொழில் நோக்கி என்னை தள்ளியது என்கிறார், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூரைச் சேர்ந்த டி. சுமதி.
நாப்கின் தயாரிப்பிற்காக மாவட்ட தொழில் மையம் மூலம் வங்கிக் கடன் ரூ.2லட்சம் பெற்றதாகவும், பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே 2011ஆம் ஆண்டு இத்தொழிலைத் தொடங்கினேன். நாப்கின் தயாரிப்பில் பல்வேறு முன்னனி நிறுவனங்கள் உள்ள சூழலில் தங்களது தயாரிப்பை எந்த வகையில் முன்னிலைப்படுத்துவது என்று யோசித்தபோதுதான், எவ்வித வேதிப்பொருள் கலப்பிடாமலும், இயற்கை முறையில் கிடைக்கும் பஞ்சுகளைக் கொண்டும் நாப்கின் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது என தெரிவிக்கிறார். நாப்கின் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சுமதி.