நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட பாஜக மாநில துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், "தகுதியான மாணவர்கள் மருத்துவராக வேண்டும் என்பதற்காகவே நீட் தேர்வு நடத்தப்படுகிறது. திமுக தலைவர் ஸ்டாலினால் எவ்வளவு காலம் ஆனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது.
"பாஜக-வை அனுசரிக்கும் கட்சியே தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முடியும்" - வி.பி.துரைசாமி! - Former DMK leader V P Duraisamy
நாமக்கல்: பாஜக-வை அனுசரித்து செல்லும் கட்சியே தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முடியும் என அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி தெரிவித்தார்.
திமுகவிலிருந்து பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். 45 ஆண்டுகள் திராவிட இயக்கத்திலிருந்தது எனது அரசியல் வாழ்க்கை வீணானது. பாஜகவை அனுசரித்து செல்லும் கட்சியே தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரமுடியும். பாஜக வேகமாக தமிழ்நாட்டில் வளர்ந்துவருகிறது" எனக் கூறினார். இறுதியாக அவர், "கரோனா பரவலை கட்டுபடுத்துவதில் தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'பொருளாதார இட ஒதுக்கீட்டை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்கிறார்' - வி.பி. துரைசாமி குற்றச்சாட்டு