நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக, ஓய்வு பெற்ற செவிலி அமுதவள்ளி, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், தரகர்கள் லீலா, ஹசீனா உட்பட எட்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர்கள் கிருஷ்ணன், ராஜா சீனிவாசன் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில் மேலும் ஒருவர் கைது! - நாமக்கல் மாவட்டம்
சேலம்: ராசிபுரத்தில் குழந்தைகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக மேலும் ஒருவரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில் மேலும் ஒருவர் கைது!
இதில் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் அமுதவள்ளி, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், இடைத்தரகர் அருள்சாமி ஆகிய மூன்று பேரை நேற்று நாமக்கல் நீதிமன்றம் மூலம் காவலில் எடுத்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் குழந்தைகள் விற்கப்பட்டது தொடர்பாக சேலத்தைச் சேர்ந்த ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர் சாந்தியை நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.