தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரவு காவலர் மர்மமான முறையில் வெட்டிக்கொலை! - வெட்டிக்கொலை

நாமக்கல்: அடையாளம் தெரியாத நபா்களால் இரவு காவலர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மர்மமான முறையில் வெட்டிக்கொலை

By

Published : Jun 16, 2019, 7:55 AM IST

நாமக்கல் மாவட்டம் எரையம்பட்டியைச் சேர்ந்தவர் பழனிகவுண்டர். இவர் நாமக்கல்லில் முதலைப்பட்டியில் உள்ள தர்ஷினி மோட்டார்ஸ் என்ற கார் பழுதுபார்க்கும் பட்டறையில் இரவு காவலராக கடந்த ஓராண்டிற்கு மேலாக பணியாற்றிவருகிறார்.

கொலை செய்யப்பட்ட பழனிகவுண்டர்

இந்நிலையில் நேற்று இரவு பழனிகவுண்டர் மர்மமான முறையில் தலை, வாய்ப் பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பிவைத்துள்ளனர்.

மர்மமான முறையில் வெட்டிக்கொலை

ஆனால் அவா் உடல்நிலை மோசமாக இருந்தமையால் உடனடியாக அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. இச்சம்பவம் குறித்து நல்லிப்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாாித்துவருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் உதவியுடன் சென்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details