நாமக்கல் அடுத்த முத்துகாபட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டிக்கு கடந்த ஜூலை 23ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அம்மூதாட்டி நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று(ஜூலை 26) காலை அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் காணவில்லை என மூதாட்டியை செவிலியர்கள், பணியாளர்கள் தேடியுள்ளனர்.
கரோனா சிகிச்சையில் இருந்த மூதாட்டி தப்பியோட்டம் - Old lady escaped
நாமக்கல்: அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி 7 கி.மீ தூரமுள்ள வீட்டுக்கு நடந்தே தப்பி சென்றார். பின்னர் ஊர் மக்கள் மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் மூதாட்டி அரசு மருத்துவமனையிலிருந்து 7 கி.மீ தூரமுள்ள தனது வீட்டிற்கு நடந்து வந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நாமக்கல் அரசு மருத்துவமனையில் வயதான மூதாட்டி என்றும் பாராமல் அவரை தரக்குறைவாக நடத்துவதால் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்துவிட்டதாக வீட்டின் அருகில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார்.