தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடனை திரும்ப செலுத்த வந்த நபர்: காசோலையை வாங்க மறுத்த அலுவலர்கள் - கடனை திரும்ப செலுத்த வந்த நபர்

நாமக்கல்: அரசு தன் மீது வாங்கியுள்ள கடனை திரும்ப செலுத்த வந்த நபரின் காசோலையை வாங்க மறுத்து வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.

nmk
nmk

By

Published : Aug 10, 2021, 10:01 PM IST

தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று (ஆக.9) அரசு நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.

இதில் தமிழ்நாடு அரசுக்கு ரூ. 5 லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளதாகவும், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ. 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 கடன் சுமை இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் நாமக்கல் அருகே மேற்கு பாலப்பட்டியைச் சேர்ந்த காந்தியவாதி ரமேஷ் தியாகராஜன் என்பவர் தனது குடும்பத்தின் கடன் தொகையான ரூ. 2.63 லட்சம் தொகைக்குரிய காசோலை அடங்கிய அட்டையை தயார் செய்து நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

காசோலை

பின் ரமேஷ் தியாகராஜன் அந்தக் கசோலையை கோட்டாட்சியர் கோட்டை குமாரிடம் வழங்க அவர் வாங்க மறுத்துவிட்டார்.

மேலும் நாமக்கல் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வழங்குமாறு கோட்டாட்சியர் தெரிவித்தார். அதன்பின் ரமேஷ் தியாகராஜன் மாவட்ட ஆட்சியரிடம் வழங்க அவரும் ஏற்க மறுத்துவிட்டார். பின் அவர் காசோலையுடன் வீடு திரும்பினார்.

இதையும் படிங்க: 3ஆவதும் பெண்: பச்சிளம் குழந்தையை அடித்துக் கொன்ற தாய்!

ABOUT THE AUTHOR

...view details