தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 4, 2020, 5:16 PM IST

ETV Bharat / state

நாமக்கல்லில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் வட்டாட்சியர்

நாமக்கல்: பேருந்துகள், இருசக்கர வாகனங்களில் முகக் கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு வட்டாட்சியர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

 முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபாராதம்
முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபாராதம்

நாமக்கல்லில் பேருந்து, இருசக்கர வாகனத்தில் முகக் கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதித்தும் முகக் கவசம் வழங்கியும் வருவாய்த் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர பிறப்பகுதிகளில் கட்டுப்பாடுகளுடன் இயல்பு நிலைக்கு திரும்பிவருகிறது.

அதனால் வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முகக் கவசம் அணியாமல் வெளியே வருபவர்களை மாநகராட்சி, நகராட்சி, வருவாய், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தடுத்து நிறுத்தி அபராதம் வசூலித்தும், அறிவுரை வழங்கியும் வருகின்றனர்.

முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபாராதம்

அதன்படி நாமக்கல் மாவட்டம் திருச்சி சாலையில் நாமக்கல் வட்டாட்சியர் பச்சமுத்து, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் முகக் கவசம் அணியாமல் பேருந்து மற்றும் சாலைகளில் வாகனங்களில் செல்பவர்களை தடுத்து நிறுத்தி முகக் கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தினர். மேலும், முகக் கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதித்தும், பேருந்தில் செல்லும் முதியவர்களுக்கு இலவசமாக முகக் கவசங்களையும் வழங்கினர்.

ABOUT THE AUTHOR

...view details