தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோடைக்காலத்தில் ஒரு நிமிடம் கூட மின்வெட்டு இருக்காது - அமைச்சர் தங்கமணி உறுதி! - No power cut in summer -Minister Thangamani

நாமக்கல்: தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் ஒரு நிமிடம் கூட மின்வெட்டு இருக்காது என மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி உறுதியளித்துள்ளார்.

கோடைக்காலத்தில் ஒரு நிமிடம் கூட மின்வெட்டு இருக்காது -அமைச்சர் தங்கமணி உறுதி!
கோடைக்காலத்தில் ஒரு நிமிடம் கூட மின்வெட்டு இருக்காது -அமைச்சர் தங்கமணி உறுதி!

By

Published : Jan 31, 2020, 10:44 PM IST


நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் முதற்கூட்டம் இன்று மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மின்சாரத் துறைஅமைச்சர் தங்கமணி, சமூகநலத் துறை அமைச்சர் சரோஜா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாரதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களுடன் நாமக்கல் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர்கள் கலந்துரையாடினர்.

பின்னர் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோடைக்காலத்தில் தமிழ்நாட்டிற்கான மின் தேவை 17 ஆயிரம் மெகாவாட் கையிருப்பில் உள்ளதால் மின்வெட்டை சமாளிக்க போதிய மின்சாரம் உள்ளது. இதனால் தமிழ்நாட்டில், ஒரு நிமிடம் கூட கோடைக்காலத்தில் மின் தடை ஏற்படாது எனத் தெரிவித்தார்.

அமைச்சர் தங்கமணி செய்தியாளர்ச் சந்திப்பு

மேலும் அவர், பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள தயாநிதிமாறன், அமைச்சர் ஜெயகுமார் மீது குற்றச்சாட்டு வைப்பதற்கு தகுதி வேண்டும் என்றும், மக்களுக்கு சேவை செய்ய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சட்டத்தை கையில் எடுப்பது சரியல்ல எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க...பள்ளியில் விவசாயம் செய்யும் மாணவர்கள்; குவியும் பாராட்டுகள்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details