தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி! - நாமக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் மக்கள்

நாமக்கல்: ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் நோயாளிகள்  பெரும் இன்னலுக்கு உள்ளாகிவருகின்றனர்.

no doctors in government hospital

By

Published : Oct 29, 2019, 5:31 PM IST

நாமக்கல் அடுத்துள்ள அலங்காரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டுவருகிறது. இங்கு தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்துசெல்கின்றனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் திலகவதி, நந்தினி என்ற இரண்டு பெண் மருத்துவர்கள் பணியாற்றிவருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதில் அலங்காநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த திலகவதியும் நந்தினியும் கலந்து கொண்டுள்ளனர். இதன் காரணமாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் நோயாளிகளுக்குச் செவிலியர் மருந்துகள் மட்டுமே வழங்குவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி

மேலும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க செவிலியர் மறுத்த காரணத்தால் நோயாளிகள் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:

பியூட்டி பார்லர் பெண் ஊழியர் சடலமாக மீட்பு - ஆணவக் கொலையா? போலீசார் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details