தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி - free cycle news in namakkal

நாமக்கல்: அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டியை அமைச்சர் சரோஜா வழங்கினார்.

நாமக்கல்: அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டியை அமைச்சர் சரோஜா வழங்கினார்.
நாமக்கல்: அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டியை அமைச்சர் சரோஜா வழங்கினார்.

By

Published : Feb 28, 2020, 10:14 PM IST

நாமக்கல் மாவட்டத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சமுக நலன், சத்துணவுத் துறை அமைச்சர் சரோஜா கலந்துகொண்டு, 15 பள்ளிகளைச் சேர்ந்த 1385 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கினார்.

பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி

இவ்விழாவில் பேசிய அவர், "மிதிவண்டி வழங்கும் திட்டத்தை 2011ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கிவைக்கப்பட்டு, இன்றுவரை சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டுவருகிறது. சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும் என்பதை அறிந்து மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா கொண்டுவந்தார்.

சைக்கிள் ஓட்டுவது உடலுக்கு நல்ல பயிற்சியாகும், மாணவர்கள் படித்தால் மட்டும் போதாது, விளையாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். அப்படி விளையாடும் மாணவர்கள் கவனம் சிதறாமல் படிப்பது மனத்தில் நன்றாகப் பதியும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க:ஆளில்லா விமானம்: ஈரோடு நடைபெற்றுவரும் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புக்கான போட்டி

ABOUT THE AUTHOR

...view details