தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத் திறனாளிகளின் வசதிகள் குறித்து ஆய்வு! - தனியார் தொண்டு நிறுவனத்தினர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், சுற்றுலாத் தலங்கள், கோயில்களில் மாற்றுத் திறனாளிகள் செல்வதற்கு உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதை பெங்களூருவைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனத்தினர் இன்று ஆய்வுசெய்தனர்.

மாற்றுத் திறனாளிகளின் வசதிகள் குறித்து ஆய்வு
மாற்றுத் திறனாளிகளின் வசதிகள் குறித்து ஆய்வு

By

Published : Feb 13, 2022, 7:30 PM IST

நாமக்கல்: இந்தியா முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், சுற்றுலாத் தலங்கள், கோயில்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய வசதி செய்யப்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசு, தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஆய்வு நடத்தி அறிக்கை தயார் செய்து, அவற்றைச் சம்பந்தப்பட்ட மாநில அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான துறைக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாடு முழுவதும் எட்டு தனியார் தொண்டு நிறுவனத்தினர் 720 இடங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தவுள்ளனர். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டத்திற்கு, பெங்களூருவைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனத்தினர் இன்று (பிப்ரவரி 13) ஆய்வுமேற்கொண்டனர்.

மாற்றுத் திறனாளிகளின் வசதிகள் குறித்து ஆய்வு

எட்டு பேர் கொண்ட இந்தக் குழு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், கொல்லிமலை, நரசிம்மர் கோயில், ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட இடங்களில் ஆய்வுமேற்கொண்டது.

மேலும், நரசிம்மர் கோயில், ஆஞ்சநேயர் கோயிலில் மாற்றுத் திறனாளிகள் செல்வதற்கு எந்த வசதியும் செய்யப்படாததும், குடிநீர், கழிவறை ஆகியவை மாற்றுத் திறனாளி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது எனவும், இது குறித்து அறிக்கை தயார் செய்து தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும் என்றும் தொண்டு நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மூளைச்சாவடைந்த மணப்பெண் - உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்!

ABOUT THE AUTHOR

...view details