நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சின்னஅரியாகவுண்டன்பட்டியை சேர்ந்த செந்தில்பாண்டியன் (40) என்பவரது மகள் சுவேதா (17). இவர் கடந்த 12ஆம் தேதி நீட் தேர்வு எழுதினார்.
இதையடுத்து அடுத்த நாளே காணாமல் போனார். இதனால் பெற்றோர் நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில், ராசிபுரம் டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் மாணவியை தேடிவருகின்றனர்.