நாமக்கல்:கோவை அருகே சாய்பாபா காலனி பகுதியைச்சேர்ந்தவர், குமாரசாமி. இவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள தனியார் நிறுவனத்தின் மேலாளராக குமாரபாளையம் பகுதியில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் குமாரசாமி இருசக்கரவாகனத்தில் சேலம் செல்லும் சாலையில் சென்றுகொண்டிருந்த போது, மின்வாரிய அலுவலகம் பகுதியில், சாலையின் குறுக்கே நாய் சென்றதால் பிரேக் பிடித்ததில், குமாரசாமி நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது பக்கவாட்டில் வந்த அரசுப்பேருந்து குமாரசாமியின் தலையின் மீது ஏறியது. இதில் மேலாளர் குமாரசாமி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குமாரபாளையம் போலீசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
நாய் குறுக்கிட்டதால் பைக்கில் சென்றவர் பேருந்துக்கடியில் விழுந்து உயிரிழந்த கொடூரம் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சாலையின் குறுக்கே நாய் சென்றதால் விபத்து நிகழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க:மயிலாடுதுறையில் பேருந்து வசதி கேட்டு கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்