தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாமக்கல்லில் தேசிய பச்சிளங் குழந்தைகள் வாரம் - Namakkal

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இன்று (நவ. 18) தேசிய பச்சிளங் குழந்தைகள் வாரவிழா நடைபெற்றது.

நாமக்கல் மருத்துவமனை
நாமக்கல் மருத்துவமனை

By

Published : Nov 18, 2020, 4:06 PM IST

ஆண்டுதோறும் நவம்பர் மாதம் மூன்றாவது வாரம் தேசிய பச்சிளங் குழந்தைகள் வார விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி, நாமக்கல் மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், தேசிய பச்சிளங் குழந்தைகள் வாரவிழா, நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் கே. சாந்தா அருள்மொழி, ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் டி.கே. சித்ரா ஆகியோர் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு அம்மா சிறப்பு பெட்டகங்களை வழங்கினர்.

அப்போது இந்நிகழ்ச்சியில் பேசிய நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் கே. சாந்தா அருள்மொழி, "தேசிய பச்சிளங் குழந்தைகள் வார விழா நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் நாள்தோறும் முகாம் நடத்தப்பட்டு குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் நலமும் பாதுகாக்கப்படுகிறது.

பச்சிளங்குழந்தைகளுக்கு சிறப்பு தடுப்பூசி அளித்தல், செவிலியருக்கு சுகாதார விழிப்புணர்வு, குழந்தைகள் கருவிலேயே நல்ல ஆரோக்கியமாக இருப்பதை உறுதிசெய்தல், குழந்தை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு சுகாதார அறிவுரைகள் போன்றவை இந்த நாள்களில் தொடர்ந்து வழங்கப்படும். இதனை தாய்மார்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் கே. சாந்தா அருள்மொழி, "நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு காலத்திலும் மருத்துவர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றிவருகின்றனர்.

நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு ஆகிய அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் பிரிவு செயல்பட்டுவருகிறது. இதன்மூலம் கடந்த எட்டு மாதங்களில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 2700 பிரசவங்கள் நடந்துள்ளன.

அவற்றுள் 18 இரட்டை பிரசவங்களும், நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் ஒரு முப்பிரசவமும் சிறப்பாக நடந்துள்ளன. இந்தக் குழந்தைகள் அனைவரும் நலமுடன் வீடு திரும்பி உள்ளனர்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details