நாமக்கல் மண்டலத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் ஆறு கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் தினசரியாக ரூ. 4.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இங்கு உற்பத்தி செய்யக்கூடிய முட்டைகளுக்கான விலையை தினசரி நாமக்கல் மண்டலத்தின் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்து வருகிறது. அதன்படி முட்டை கொள்முதல் விலை ரூ.4.80 இருந்த 25 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.5.05 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தாண்டில் முட்டை விலை 5 ரூபாயை கடந்தது இதுவே முதல் முறை ஆகும். இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவரான சிங்குராஜிடம் கேட்டபோது, "கரோனா நோய் தொற்றால் முழு ஊரடங்கு அமலில் இருந்த காலகட்டத்தில் நாமக்கல் மண்டலம் மட்டும் அல்லாமல் நாடு முழுவதிலும் கோழிப் பண்ணைகளில் உள்ள கோழி குஞ்சுகளின் உற்பத்தியை நிறுத்தி வைத்திருந்தோம்.
ஆனால் சென்ற இரண்டு மாத காலமாக முட்டை விற்பனை அதிகரித்து வருவதோடு, சத்துணவிற்கும் முட்டைகள் செல்கின்றன. டெல்லி போன்ற வட மாநிலங்களில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.