இந்தியா முழுவதும் கரோனா தடுப்புப் பணிகளில் மருத்துவர்கள், செவிலியர், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் எனப் பலரும் அயராது உழைத்துவருகின்றனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் இத்தகைய பணியாளர்களை பல தரப்பட்ட பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சியினரும் கெளரவித்துவருகின்றனர்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பெரியப்பட்டி அடுத்துள்ள நரிக்குறவர் காலனியில் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் வசித்துவருகின்றனர். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து போதிய வருமானமின்றி தவித்துவருகின்றனர்.
பாத பூஜை செய்த நரிக்குறவர்கள் இருந்தபோதிலும் அன்றாட தங்களது பகுதியில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களை கெளரவிக்கும் வகையில் அவர்களின் பாதங்களில் பாலூற்றி சுத்தம்செய்து பாத பூஜை நடத்தினர்.
இதையும் படிங்க: தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்