தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வருங்கால முதல்வரே!' - திருச்செங்கோடு விஜய் ரசிகர்கள்

நாமக்கல்: திருச்செங்கோட்டில் நடிகர் விஜய்க்கு 'வருங்கால முதல்வரே' எனப் போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் போஸ்டர்
விஜய் போஸ்டர்

By

Published : Sep 16, 2020, 8:02 PM IST

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பல்வேறு பகுதிகளில் விஜய் ரசிகர்களால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

திரையரங்குகள் 'மாஸ்டர்' பட வருகையை எதிர்நோக்கி உள்ளதுபோல, தமிழ்நாட்டு மக்களும் விஜய்யின் அரசியல் பயணத்தை எதிர்பார்த்துள்ளதாகவும் "வருங்கால முதல்வரே" எனவும் போஸ்டர்களில் கூறப்பட்டு உள்ளது.

மேலும், எம்ஜிஆர் புகைப்படத்துடன் சட்டப்பேரவை கட்டித்தின் பின்னணியில் விஜய் பேசுவது போன்ற படங்கள் வைத்து ஒட்டப்பட்டுள்ளது.

விஜய் போஸ்டர்
திருச்செங்கோடு நகர இணையதள தலைமை விஜய் ரசிகர் மன்றத்தால் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் அதிமுகவினர் - பொதுமக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details