நாமக்கல்:திருச்செங்கோட்டில் கடந்த 42 ஆண்டுகளுக்கு முன்பு மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாத திருவிழாவில் தெப்ப தேர் உற்சவம் நடைபெறுவது வழக்கம். ஆனால் 1980களில் ஒருமுறை திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்திலும் நீர் வற்றியது.
திருச்செங்கோடு முழுவதும் கடும் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் அந்த வருடம் மாரியம்மனுக்கு ஐப்பசி மாத திருவிழா நடத்தவில்லை. அடுத்து வரும் காலங்களில் தெப்ப தேர் உற்சவம் நடைபெறும் என பொதுமக்கள் எதிர்பார்த்த நிலையில் அடுத்தடுத்த வருடங்களில் ஐப்பசி மாதம் கடும் வறட்சி ஏற்பட்டது.
இந்தாண்டு திருச்செங்கோடு பகுதி முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது. தெப்பக்குளத்திலும் தண்ணீர் நிரம்பியது. அதனால் இந்தாண்டு தெப்ப தேர் உற்சவம் நடைபெறும் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்தாண்டு தெப்ப தேர் உற்சவம் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.