நாமக்கலில் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியாம் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் சரோஜா ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக பெண் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1956 பயனாளிகளுக்கு ரூ. 14 கோடி மதிப்பிலான 15.60 கிலோ கிராம் தங்கம் மற்றும் உதவித் தொகைகளை வழங்கினர். மேலும் 8 ஆயிரத்து 366 பயனாளிகள் மற்றும் பட்டதாரி பெண்களுக்கு 4 கிராம் தங்கமும் 40 அயிரம் ரொக்கமும் வழங்கினர். பள்ளிக்குச் செல்லாத பெண் குழந்தைகளுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் 20 அயிரம் ரொக்க பணமும் என மொத்தம் ரூ.11.40 கோடி நிதியுதவியை அமைச்சர்கள் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி,
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கட்சியில் உள்ள ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முடிவு செய்வார்கள். தமிழகத்தில் இனி வரும் கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பே இல்லை. தேவைக்கு அதிகமாகவே மின் உற்பத்தி தயாராக இருக்கிறது.
பாஐக உடன் அதிமுக கூட்டணி உறுதியா? எனும் யூகத்திற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. கூட்டணி குறித்து முடிவு எடுக்க அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இருக்கிறார்கள். ஸ்டாலின் நடத்தி வரும் கிராம சபைக் கூட்டங்களில் அவருக்கு வேலை இல்லை என்பதும், அவருக்கு வேலை வேண்டும் என்பதற்காக இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தேர்தலுக்குப் பிறகு மக்களின் செல்வாக்கு யாருக்கு இருக்கிறது என்பது தெரியவரும். மக்கள் அனைவரும் அதிமுக கட்சியின் பக்கம் என்று தெரிவித்தார்.