தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவிரி ஆற்றில் மணல் திருட்டு - சரக்கு ஆட்டோ, 2 யூனிட் மணல் பறிமுதல் - மணல் திருட்டில் ஈடுபட்ட ஆட்டோ பறிமுதல்

நாமக்கல்: மோகனூர் பகுதியில் காவிரி ஆற்றிலிருந்து மணல் திருட்டில் ஈடுபட்ட சரக்கு ஆட்டோவுடன், 2 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தப்பியோடிய ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Namakkal taluk officer seized Auto involved Sand theft
மணல் திருட்டில் ஈடுபட்ட ஆட்டோ பறிமுதல்

By

Published : Jun 19, 2020, 2:46 PM IST

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியிலுள்ள காவிரி ஆற்றிலிருந்து சட்ட விரோதமாக மணல் அள்ளி கடத்தப்படுவதாக நாமக்கல் வட்டாட்சியர் ராஜேஷ் கண்ணாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் வட்டாட்சியர் தலைமையிலான அலுவலர்கள் மணப்பள்ளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வாழவந்தி நோக்கி வேகமாக சென்ற ஆட்டோவை பிடிக்க முயற்சித்தபோது, ஆட்டோவை நிறுத்தி விட்டு ஓட்டுநர் தப்பியோடினார். இதையடுத்து ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டதில், நன்செய் இடையார் பகுதியைச் சேர்ந்த பத்மநாபன் என்பவர், காவிரி ஆற்றிலிருந்து 2 யூனிட் மணலை கடத்தி விற்பது தெரியவந்தது.

மணல் திருட்டில் ஈடுபட்ட ஆட்டோ பறிமுதல்

இதைத்தொடர்ந்து பறிமுதல் செய்த ஆட்டோ காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details