நாமக்கல் அடுத்த பரளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சார்பில் சுவர் சித்திரங்கள் வரையும் போட்டி நடைபெற்றது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வரை உள்ள பள்ளி மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
போட்டியில் ஐந்து மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு குழந்தைகளின் கல்வி உரிமை, பெண்கள், பெண் குழந்தை பாதுகாப்பு மற்றும் தன்சுத்தம், சுகாதாரம் சார்ந்து மாணவர்கள் ஓவியங்களை வரைந்தனர். மேலும் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஓவியமும் இதில் இடம் பெற்றிருந்தது.
பள்ளி சுற்றுச்சுவரில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்த நாமக்கல் மாணவர்கள்! இதில் சிறப்பாக ஓவியங்களை வரைந்த மாணவர்களை பாராட்டிய ஆசிரியர்கள் வரையப்பட்ட ஓவியங்களை மதிப்பீடு செய்து ரொக்க பரிசுகளை வழங்கி பாராட்டினர். அப்போது மாணவர்கள் வரைந்த ஓவியங்களை பார்வையிட்ட ஆசிரியர்கள், அதில் உள்ள சிறு, சிறு தவறுகளை சுட்டிக்காட்டி இன்னும் எவ்வாறு சிறப்பாக அதனை பட்டை தீட்டுவது என எடுத்து கூறி, வரும் நாட்களில் புதியதாக ஓவியம் வரையும் போது இன்னும் சிறப்பாக செயல்பட அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க...புதுச்சேரியில் பெரும்பான்மை யாருக்கு? வரும் 22ஆம் தேதி முடிவு