நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஈகாட்டூர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ்(20) தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அவருக்கு இன்று(செப்.13) செயல்முறை தேர்வு நடைபெறவிருந்தது. இதற்காக தீவிரமாக படித்துவந்த நிலையில், காலை கல்லூரிக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் இவர் வீடு திரும்பததால் பெற்றோர்கள் தேட ஆரம்பித்துள்ளனர். அப்போது, மாம்பாளையம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றின் அருகே அவரது பை, அடையாள அட்டை ஆகியவை கிடந்துள்ளன. உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு விரைந்த வீரர்கள் 20 நிமிடம் தேடி உடலை மீட்டனர். தற்போது மாணவன் உடல் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.