நாமக்கல் மாவட்டம் சமூக நலத்துறை சார்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் 'பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கோமதி கலந்து கொண்டு மாணவிகளிடம் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், 'நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. பெண் குழந்தைகள் நன்றாக படித்து சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்' என்றார்.