கரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவருகின்றனர். ஊரடங்கால் கோயில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமிய நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகவும், தங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் எனவும் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் கோட்டைக்குமாரிடம் கோரிக்கை விடுத்திருந்தினர்.
கிராமியக் கலைஞர்கள் கோரிக்கை; நிவாரணம் வழங்கிய வருவாய் கோட்டாட்சியர் - namakkal RDO
நாமக்கல்: ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்த கிராமியக் கலைஞர்களின் கோரிக்கையை ஏற்று வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கினார்.
namakkal RDO helps to rural artists
அவர்களின் கோரிக்கையை ஏற்று இன்று நாமக்கல் நகராட்சி மண்டபத்தில் நலிவடைந்த கிராமியக் கலைஞர்களுக்கு நிவாரணப் பொருள்களை நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் கோட்டைக்குமார் வழங்கினார். இதில் கரகாட்டம், ஒயிலாட்டக் கலைஞர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமியக் கலைஞர்கள் பங்கேற்று நிவாரணப் பொருள்களைப் பெற்றுச் சென்றனர்.
இதையும் படிங்க:மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக தங்க வைத்த வட்டாட்சியர்!