நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், முட்டை ஒன்றின் கொள்முதல் விலையை 3 ரூபாய் 87 காசுகளிலிருந்து நேற்று ஒரேநாளில் 17 காசுகள் குறைந்து 3 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
கடந்த 1ஆம் தேதி முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 4 ரூபாய் 15 காசுகளாக இருந்த நிலையில் ஒரேநாளில் 25 காசுகள் குறைக்கப்பட்டு 3 ரூபாய் 90 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 2ஆம் தேதி 2 காசுகள் உயர்த்தப்பட்டு, மீண்டும் 4ஆம் தேதி ஐந்து காசுகள் குறைக்கப்பட்டு 3 ரூபாய் 87 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்நிலையில் தொடர்ந்து முட்டை விற்பனையில் தேக்கம் ஏற்பட்டதால் முட்டை கொள்முதல் விலையை மேலும் 17 காசுகள் அதிரடியாக குறைத்து 3 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.